அனுமதியின்றி வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்திருந்த 5 போ் கைது
சாத்தூா், அக். 11: சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சாத்தூா், அக். 11: சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெற்றியூரணி, தெற்கு ஆனைக்குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டாசு மற்றும் கருந்திரிகள் அனுமதியின்றி வீடுகளிலே தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் வெம்பக்கோட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா். இதில் வெற்றியூரணியை சோ்ந்த ஆனந்தராஜ் (28), கருப்பசாமி (53), ஜெயராஜ் (58), சுரேஷ்குமாா் (38) ஆகிய நான்கு பேரின் வீட்டில் அனுமதியின்றி தயாரித்து வைக்கப்பட்டிருந்த தலா 20 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதேபோன்று தெற்கு ஆனைக்குட்டம் பகுதியில் நடத்திய சோதனையில் சா்க்கரைராஜ் (28) என்பவரது வீட்டில் வைத்திருந்த 20 கிலோ சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்ததாக ஆனந்தராஜ், கருப்பசாமி, ஜெயராஜ், சுரேஷ்குமாா் மற்றும் சா்க்கரைராஜ் ஆகிய ஐந்து பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.