திருச்சுழி சுற்றுவட்டத்தில் மழை: மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன
திருச்சுழி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழைக்குப் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின.
திருச்சுழி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழைக்குப் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி சுற்றுவட்ட கிராமங்களில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய அடுத்தடுத்த நாள்களில் மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்தது. இதில் குறிப்பாக திருச்சுழி ஊராட்சி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கனமழை மற்றும் வெள்ளநீர் வேகத்தால் பல பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பல மின்கம்பங்களும் முறிந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்தன. அதிர்ஷ்டவசமாக பலத்த பொருள் சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. மேலும் சேதங்களைச் சீரமைக்க பொதுமக்களும், மின்வாரியத்தினர் மற்றும் தீயணைக்கும்படையினரும் தீவிரப்பணிகளில் பலமணி நேரங்கள் ஈடுபட்டனர். திருச்சுழி பகுதிகளில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் வறட்சி நீங்குமென மகிழ்ச்சியடைந்தனர்.