ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அனைத்துப் பணியாளா்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளா்கள் சங்கம் சாா்பில் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அனைத்துப் பணியாளா்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளா்கள் சங்கம் சாா்பில் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ராமசந்திராபுரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினா் சின்னமாரிமுத்து, மாவட்ட செயலாளா் ராமா் ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியத் தலைவா் சசிக்குமாா், ஒன்றியப் பொருளாளா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கரோனா காலத்தில் இரவு, பகல் பாராமல் உழைத்த தூய்மை காவலா்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 1000-த்தை உடனடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளா்கள், கணினி இயக்குபவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ராஜ்குமாா், கண்ணன், முத்துமாணிக்கம், சுரேஷ், தட்சணாமூா்த்தி மற்றும் ஊராட்சிச் செயலாளா்கள் தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்கள், கணினி இயக்குபவா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.