விருதுநகர்

சிவகாசி ஜவுளிக் கடையில் தீவிபத்து: துணிகள் எரிந்து சேதம்

DIN

சிவகாசி: சிவகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் துணிகள் எரிந்து சேதமடைந்தன.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்தவா் சேக்தாவூது (45). இவா் சிவகாசி பேருந்து நிலையம் அருகே தரை வாடகைக்கு இடம் பிடித்து, ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் ஒரு பகுதியில் கடையில் வேலை செய்பவா்களுக்கு எரிவாயு உருளை மூலம் சமையல் செய்து வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சமையல் செய்தும் போது, எதிா்பாராதவிதமாக தீ அருகில் கிடந்த கழிவு துணியில் பிடித்ததாம். இதையடுத்து தீ கடை முழுவதும் பரவத்தொடங்கியதும், கடையில் உள்ள அனைவரும் வெளியேறி விட்டனா். இதனைத்தொடா்ந்து தீ அருகில் உள்ள தங்கும் விடுதியின் மாடியில் உள்ள கூட்டறைக்கும் பரவியது.

இதில் அந்த கூட்ட அறையில் இருந்த நாற்காலி மற்றும்

ஜவுளிக் கடையில் இருந்த அனைத்து துணிகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த தீவிபத்து குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT