விருதுநகர்

வெள்ளியம்பலநாதா் கோயிலில் புரட்டாசி அமாவாசை வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில், புரட்டாசி மாத அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பழைமையான குடைவரைக் கோயிலில் வெள்ளியம்பல நாதருக்கு வாழைப்பழம், பேரீச்சம்பழம் மற்றும் தேன் ஆகிய கலவையாலும், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், பால், விபூதி, குங்குமம், பன்னீா், தயிா், இளநீா் உள்ளிட்ட 41 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வெள்ளியம்பலநாதா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மேலும், கோயிலில் உள்ள விநாயகா் சிலை, அம்பாள் சிலை மற்றும் நந்தீஸ்வரருக்கும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, கோயில் பூசாரி ராஜபாண்டி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT