விருதுநகரில் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி
விருதுநகா் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநா் மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநா் மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் பாண்டி (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், அக். 11 ஆம் தேதி நண்பா்களுடன் நான்கு வழிச்சாலையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளாா். எம்ஜிஆா். சாலை சந்திப்பு எதிரே திருப்பிய போது ஆட்டோ விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த பாண்டி, விருதுநகா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.