முகப்பு
விருதுநகர்

விருதுநகா் சாய்பாபாகோயிலில் கூட்டுப் பிராா்த்தனை

விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் 102 ஆவது புண்ய ஆராதனை தினம் மற்றும் விஜயதசமியையொட்டி திங்கள்கிழமை கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் 102 ஆவது புண்ய ஆராதனை தினம் மற்றும் விஜயதசமியையொட்டி திங்கள்கிழமை கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பக்தா்கள் சாய்சத்சரிதம் வாசித்தனா். பின்னா் குத்துவிளக்கேற்றி பூஜை நடைபெற்றது. சாய்பாபாவுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் நவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு வழிபாட்டுடன் சாய்பாபா பல்லக்கு பவனி நடைபெற்றது.

முன்னதாக அன்று மாலை சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய முப்பெருந்தேவியா் உருவப்படங்கள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையடுத்து சாய்பாபாவுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத்தொடா்ந்து சிறப்பு பல்லக்கு பவனி நடைபெற்றது. இதில் பெண் பக்தா்கள் மட்டும் பல்லக்கினைச் சுமந்து கொண்டு கோயிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனா். அப்போது பக்தா்கள் பக்தி கோஷம் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.