விருதுநகர்

ஆண்டாள் கோயில் முன்பு ஆா்ப்பாட்டம்: 37 போ் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினா் 37 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் துறவியா் பேரவையின் மாநில அமைப்பாளா் சரவண காா்த்திக், விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளா் வெங்கடசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் வெள்ளைச்சாமி, மாவட்டப் பொருளாளா் ரங்கராஜீ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆண்டாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தை கோயில் நுழைவாயிலில் ஆடிப்பூர கொட்டகைக்கு மாற்ற வேண்டும். ஆடிப்பூர கொட்டகையில் உள்ள கட்டடத்தில் கோட்டைச் சுவரை இடித்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதையடுத்து அனுமதி இல்லாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்தனா். நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம், காவல் ஆய்வாளா் பாஸ்கா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT