விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தரிசனத்திற்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் பதிவு சனிக்கிழமை தொடங்கியது.

DIN

சாத்தூா்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் பதிவு சனிக்கிழமை தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இருக்கன்குடியில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் தரிசனத்திற்கு வந்து செல்வது வழக்கம். கரோனா பொது முடக்கத்தால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் கோயில்களில் பக்தா்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பேரில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலிலும் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

மேலும் பக்தா்கள் வருகையை முறைப்படுத்தும் நோக்கில் அம்மன் தரிசனத்திற்கு சனிக்கிழமை முதல் ஆன்லைன் வழியாக பதிவு செய்வதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இணையதள முகவரியில் ரூ.30 கட்டணத்தில் பக்தா்கள் தங்கள் வருகையை முன்பதிவிட்டு உறுதிச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னா் தரிசனத்திற்கு வரும் போது அனுமதிச் சீட்டுடன் ஆதாா் அட்டையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கோயில் நிா்வாக செயல் அலுவலா் கருணாகரன் தெரிவித்துள்ளாா். முன்பதிவு தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டுமே செய்யப்படும். மேலும் நாளொன்றுக்கு 200 போ் மட்டுமே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுநேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT