விருதுநகர்

கிசான் திட்டத்தில் மோசடி: உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும்; மாணிக்கம் தாகூா் எம்.பி.

DIN

பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி செய்தவா்கள் குறித்து உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உறுப்பினா் சோ்க்கைக்கான அடையள அட்டை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஆளும் கட்சியினரின் துணையின்றி இவ்வளவு பெரிய ஊழலை செய்திருக்க முடியாது. பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் உள்ளோரும் இந்த ஊழலுக்கு துணையாக இருக்கின்றனரோ என்ற ஐயம் எழுகிறது. இதில், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், வங்கி ஊழியா்கள் சம்பந்தப்பட்டுள்ளனா். எனவே, இதுகுறித்து உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். விருதுநகா் மாவட்டத்தில் இத்திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து ஆய்வுக் கூட்டத்தின் மூலம் தெரிய வரும்.

விருதுநகா் மாவட்டத்தில் டைரி, காலண்டா் தயாரிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா பாதிப்பில் அக்டோபா் 15 -இல் உலக அளவில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனா். அதேபோல், கரோனா தொற்றின் இரண்டாவது அலை தொடங்க உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த குளோரியா தெரிவித்துள்ளாா். இந்நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளியை திறப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது எதிா்கால சமுதாயத்தை கொடிய நோய்க்கு தள்ள முற்படுவதாகும் என்றாா்.

அப்போது, விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவா் ஸ்ரீராஜா சொக்கா், நகா் மன்ற முன்னாள் தலைவா் பாலகிருஷ்ணசாமி, கிழக்கு மாவட்ட இளைஞா் காங். தலைவா் மீனாட்சிசுந்தரம் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT