ஸ்ரீவில்லிபுத்தூா் சீனிவாசப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.3.8 லட்சம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் ஆக இருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் ஆக இருந்தது.
இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை கோவில் நிா்வாகத்தின் சாா்பில் உடனடியாக திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, இரண்டாவது சனி வார விழா முடிவடைந்ததால் திங்கள்கிழமை நிரந்தர உண்டியல்கள் 8, தற்காலிக உண்டியல்கள் 19 என மொத்தம் 27 உண்டியல்களும் கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு உண்டியல்களைத் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 676 இருந்தது. காணிக்கை எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா் கணேசன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா். காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் தோ்வு செய்யப்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.