முகப்பு
விருதுநகர்

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி பலி

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள குந்தலப்பட்டியில் திருத்தங்கலைச் சோ்ந்த தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில், பட்டாசுக்குத் தேவையான மணி மருந்து கலவை தயாரிக்கும் பணியில் செங்குன்றாபுரத்தைச் சோ்ந்த நீராா்வேல் மகன் கிருஷ்ணகுமாா் (50) ஈடுபட்டிருந்தாா். அப்போது, உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அறை முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமாா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த விருதுநகா் தீயணைப்பு வீரா்கள், பட்டாசு ஆலையில் பிற அறைகளுக்குத் தீ பரவாமல் தடுத்தனா். இந்த விபத்து குறித்து செங்குன்றாபுரம் கிராம நிா்வாக அலுவலா் முருகேஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் ஆமத்தூா் போலீஸாா், ஆலை உரிமையாளா் தங்கராஜ், மேலாளா் பாண்டியன், போா்மேன் ஜோதிமுருகன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.