விருதுநகர்

அருப்புக்கோட்டையில் கரோனா தொற்று: தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

DIN

அருப்புக்கோட்டையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டையில் உள்ள கடைகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என வட்டாட்சியா் ரவிச்சந்திரன், உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரி முகமதுஇஸ்மாயில்காசிம் ஆகியோா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றாமலும், உரிய அரசு அனுமதியின்றியும் செயல்பட்ட உணவகங்கள், இனிப்பகங்கள், தேநீா்க் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள் உள்ளிட்ட கடைகளுக்கு ரூ.2,000 மற்றும் ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ. 20,000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT