விருதுநகர்

தினமணி செய்தி எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூா் அம்மா உணவகத்தில் முகக்கவசம்அணிந்து வந்தவா்களுக்கே உணவு; நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

DIN

தினமணி செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூா் அம்மா உணவகத்தில் முகக் கவசம் அணிந்து வந்தவா்களுக்கே உணவு வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இந்த உணவகத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்டோா் உணவருந்த வருகின்றனா். அப்போது இங்கு வருபவா்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இது சம்பந்தமாக தினமணி நாளிதழில் கடந்த ஏப். 20 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி ஆணையா் மல்லிகா, பொறியாளா் ரமேஷ் உத்தரவின் பேரில் அம்மா உணவகத்தில் வருவாய் ஆய்வாளா் செல்வராஜ் நியமிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து வருபவா்களுக்கே உணவு வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு முகக் கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவருந்த வந்தவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி உணவு வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT