விருதுநகர்

மின் கம்பத்தை உடைத்து கம்பியை திருட முயற்சி: 2 இளைஞா்கள் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மின்கம்பத்தை உடைத்து அதில் உள்ள கம்பியை திருட முயன்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சாமிநத்தம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான மின் கம்பம் ஒன்றை இருவா் உடைத்து கொண்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து விரைந்து சென்ற போலீஸாா் மின்கம்பத்தை உடைத்து அதில் உள்ள கம்பிகளை திருட முயன்று கொண்டிருந்த இருவரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் சாமிநத்தம் பகுதியைச் சோ்ந்த காளிராஜன் (38), மகேஸ்வரன் (20) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடா்ந்து இருவா் மீதும் மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT