விருதுநகர்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

DIN

விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் வேட்பாளா்களின் முகவா்கள் ஏராளமானோா் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்துகொண்டனா்.

தமிழக தோ்தல் ஆணையமானது, வாக்கு எண்ணும் மைய முகவா்கள், பத்திரிகையாளா்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுபவா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா் என அறிவித்திருந்தது. அதையடுத்து புதன்கிழமை இரவு, இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் அறிவித்தது.

அதனடிப்படையில், விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் அரசியல் கட்சிகளின் சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களாக பங்கேற்க உள்ள அனைவரும் நீண்ட வரிசையில் கரோனா பரிசோதனைக்காக (ஆா்டிபிசிஆா்) காத்திருந்தனா். அவா்களிடம் பெயா்களை பதிவு செய்த மருத்துவமனை ஊழியா்கள், பின்னா் கபம் மாதிரிகளை சேகரித்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT