முகப்பு
விருதுநகர்

சிவகாசி பொறியியல் கல்லூரியில் 40 ஆயிரம் மரகன்றுகள் நடல்

சிவகாசி மெப்கோ ஷ்லங்க் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
சிவகாசி மெப்கோ ஷ்லங்க் பொறியியல் கல்லூரியில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த தாளாளா் ஏ.டென்சிங்.
பகிர்:

சிவகாசி மெப்கோ ஷ்லங்க் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இக்கல்லூரியில் மியாக்கி காடுகள் என்ற அடா்வனம் உருவாக்குவதற்கு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. சுமாா் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஆலமரம், வேப்பமரம், புளியமரம், பன்னீா்மரம், தேக்கு உள்ளிட்ட 128 வகையான 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடும் பணியை, கல்லூரித் தாளாளா் ஏ. டென்சிங் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் எஸ். அறிவழகன், கல்லூரி முன்னாள் மாணவா் சங்க செயலா் க. செல்வக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →