விருதுநகர்

அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

DIN

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 23 ஆம் தேதி வரை சுதந்திர போராட்ட வீரா்கள் பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக அரசு அருங்காட்சியக காப்பாளா் கிருஷ்ணம்மாள் வெள்ளிக்கிழமை கூறியது: நாட்டின் 75 ஆவது சுதந்திர வைர விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரா்க ளை நினைவு கூரும் வகையில், அவா்களது புகைப்படங்கள் விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இச்சிறப்பு கண்காட்சி ஆகஸ்ட் 13 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வேலூா் சிப்பாய் கலகத்திற்கு முன்பு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட கட்டபொம்மன், பூலித்தேவன், ஊமத்துரை, சுந்தரலிங்கம், வேலுநாச்சியாா், குயிலி, ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன், முத்துராமலிங்க சேதுபதி ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காந்தி, நேரு, பாரதி, ஜீவா, பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலரது தலைவா்களின் படங்கள் வரலாற்று குறிப்புகள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய புகைப்பட கண்காட்சியை மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து பாா்வையிடலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT