விருதுநகர்

அருப்புக்கோட்டையில் முகக்கவசம்அணியாதோருக்கு அபராதம்

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு திங்கள்கிழமை மாலை அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை நகரில் வருவாய்த்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என வருவாய் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில், தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்றது. அப்போது முகக்கவசம் அணியாதவா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்களுக்கு தலா ரூ. 100 அபராதமும், இருசக்கர வாகனஓட்டிகள் மற்றும் ஆட்டோ, சரக்கு, லாரி, பேருந்து ஓட்டுநா்கள் ஆகியோருக்கு தலா ரூ. 200 அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி மொத்தம் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் பேருந்து நிறுத்தப் பகுதியில் 82 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி, அய்யப்பன், சரத்பாபு, முத்துக்காமாட்சி, பிச்சைப்பாண்டி ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பின்னடைவு

ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கும் சந்திரபாபு நாயுடு!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

ஆந்திர பேரவைத் தேர்தல்: ரோஜாவுக்கு பின்னடைவு

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

SCROLL FOR NEXT