விருதுநகர்

சிவகாசி அருகே நெகிழிப் பை தயாரிப்பு ஆலைக்கு ‘சீல்’

DIN

சிவகாசி அருகே தடைசெய்யப்பட்டநெகிழிப் பைகளை தயாரித்த ஆலைக்கு திங்கள்கிழமை மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து சிவகாசி வட்டாட்சியா் ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருத்தங்கல் ஸ்டேட்பேங்க் காலனியை சோ்ந்த கோபிநாத் என்பவருக்குச் சொந்தமான நெகிழிப்பை தயாரிக்கும் ஆலை செங்கமலநாட்சியாா்புரத்தில் உள்ளது. தமிழக அரசு நெகிழிப் பைகளுக்கு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆலையில் கடந்த 17 ஆம் தேதி விருதுகா் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது அந்த ஆலையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பைகள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட இந்த ஆலையில் மீண்டும் நெகிழிப் பைகள் தயாரிக்கும் பணி நடைபெறுவதாக கிடைத்தத் தகவலின் பேரில் , மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில் சீல் வைக்கப்பட்டிருந்த ஆலையின் பின்வாசல் கதவை திறந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT