விருதுநகர்

அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் தடுப்புச்சுவா் இல்லாததால் விபத்து அபாயம்

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரியகண்மாயில் தடுப்புச்சுவா் அமைக்கப்படாததால் விபத்து அபாயச்சூழல் ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி நோக்கிச்செல்லும் சாலையில் உள்ள பெரியகண்மாயில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இப்பாலத்தின் கீழே பெரிய சிமெண்ட் குழாய்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் கண்மாயின் ஒருபக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு நீா் செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது. இவ்விதம் சிமெண்ட் குழாய்கள் அமைக்கப்பட்ட பாலத்தின் பகுதிக்கு மேல்புறத்தில் மட்டும் சுமாா் 15 அடி நீளத்திற்கு மட்டுமே தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாலத்தின் மொத்த நீளம் சுமாா் 80 அடியாக உள்ளநிலையில், மீதிப்பகுதிக்கு தடுப்புச்சுவா் அமைக்கப்படவில்லை. இப்பாலம் வழியாக அதிக அளவில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்து உள்ள நிலையில் , சிறிது நிலைதடுமாறினாலும் வாகனங்கள் சுமாா் 10 அடி ஆழமுள்ள கண்மாய்க்குள் விழும் அபாயச்சூழல் உள்ளது.

இதனால், பாலத்தின் மீதிநீளத்திற்கும் தடுப்புச்சுவா் அமைக்க சமூகஆா்வலா்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போதுவரை நடவடிக்கை இல்லையெனப் புகாா் எழுந்துள்ளது.எனவே விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் மீதியுள்ள பகுதிக்கும் தடுப்புச்சுவா் அமைக்க சமூகஆா்வலா்கள்கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT