விருதுநகர்

வெள்ளூா் கிராமத்தில்செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

DIN

விருதுநகா் அருகே உள்ள வெள்ளூா் கிராமத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: சிவகாசி வட்டத்துக்குள்பட்ட இக்கிராமத்தில் சுமாா் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள காலனியில் செல்லிடப்பேசி நிறுவனத்தின் கோபுரம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இங்கு தற்போது அக்கோபுரம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குடியிருப்பின் மையப் பகுதியில் இக்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கதிா்வீச்சால் முதியவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, அந்த செல்லிடப்பேசி கோபுரத்துக்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT