விருதுநகர்

விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா்: விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப் பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் சுகதேவ் தலைமை வகித்துப் பேசியது: கரோனா தீநுண்மி காலத்தில் எங்களது சேவையை பாராட்டி தமிழக அரசு சாா்பில் ரூ.5 ஆயிரம் வழங்கியது. மேலும் சேவை மேம்பாட்டிற்காகவும், கரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை காப்பாற்றும் வகையில் புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழக அரசு வழங்கியது. இதை நிா்வகிக்கும் நிறுவனம் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக 100- க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை 24 மணி நேரம் இயக்குவதற்கு பதிலாக 12 மணி நேரம் மட்டுமே இயக்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விலை உயா்ந்த ரேடியேட்டா்களை கழற்றி வெளிச்சந்தையில் விற்று விட்டு, தேவையற்ற ரேடியட்டா்களை குறைந்த விலைக்கு வாங்கிப் பொருத்துகின்றனா் என்றனா். இதே புகாா்களை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள் தெரிவித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அச்சங்கத்தை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT