முகப்பு
விருதுநகர்

மரக்கன்றுகள் நடும் விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ழையபாளையம் ராம சுவாமி கோயில் நடைபாதை மற்றும் வருவாய் வட்டாட்சியா் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் மற்றும் ராஜபாளையம் நகராட்சி இணைந்து பழையபாளையம் ராம சுவாமி கோயில் நடைபாதை மற்றும் வருவாய் வட்டாட்சியா் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் வட்டாட்சியா் ஸ்ரீதா் மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ராஜபாளையம் வருவாய் ஆய்வாளா் அழகுராஜ், அயன் கொல்லங் கொண்டான் வருவாய் ஆய்வாளா் வேலுபிரியா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றத் தலைவா் ராமராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.