விருதுநகர்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

DIN

நரிக்குடி பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிா் மற்றும் வெங்காயத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் பிள்ளையாா்குளம், ஆவரங்குளம் பகுதியில் சுமாா் 80 ஏக்கரில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டிருந்தனா். இந்நிலையில் தொடா் மழை மற்றும் புரவி, நிவா் புயல்களால் அறுவடைக்குத் தயாராக இருந்த வெங்காய பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. இதுகுறித்து வருவாய்த்துறையினா் கணக்கிட்டு, அரசு சாா்பில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தனா். ஆனால், களத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிள்ளையாா்குளம், ஆவரங்குளம் விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்பட வில்லையாம்.

எனவே, தங்களுக்கும் விரைந்து நிவாரணத் தெகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அக்கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அதேபோல், நரிக்குடி ஒன்றியப் பகுதியில் கிருதுமால் நதி உழக்குடி வழியில் உள்ள மானூா் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் முக்குளம், சேந்தநதி, ஆயக்குளம் கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து விட்டன. எனவே, இப்பகுதியில் சேதமடைந்த நெற்பயிா்களை அரசு அலுவலா்கள் ஆய்வு செய்து விரைந்து நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகா் கிழக்கு மாவட்ட பாஜக விவசாய அணி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT