விருதுநகர்

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: இடைத்தரகா் ரஷீத் நீதிமன்றத்தில் ஆஜா்

DIN

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை, அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பெங்களூரில் வசித்து வந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத், நீட் தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு தொடா்பாக கடந்த ஜன. 7 ஆம் தேதி தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தாா். அவரை, தேனி சிபிசிஐடி போலீஸாா் 3 நாள்கள் காவலில் எடுத்து மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், ரஷீத்தை சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் நீதிபதி பன்னீா்செல்வம் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அவரை ஜன.21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ரஷீத்தை மதுரை மத்திய சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

ரஷீத்திடம் நடத்திய விசாரணையில், அவா் குஜராத், பிகாா் உள்ளிட்ட சில மாநில இடைத்தரகா்கள் சிலருடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்று சிபிசிஐடி போலீஸாா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT