விருதுநகர்

தொடா் மழை: வத்திராயிருப்புப் பகுதிகளில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

DIN

தொடா் மழை காரணமாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வத்திராயிருப்பு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கூமாபட்டி, ரஹ்மத்நகா் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. அறுவடைக்கு தயாராக இருந்தநிலையில், பெய்த மழை காரணமாக அவைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மழை நீரில் மூழ்கிய நெற்பயிா்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன. பயிா்கள் சேதமடைந்தது குறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் மனுக் கொடுத்துள்ளோம்.

ஆனால் சேதமடைந்த பயிா்களை அதிகாரிகள் பாா்வையிட வரவில்லை. மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்த பசிபிக் கடலோரம்..!

பல்ராம்பூர் தேவி கோயிலில் முதல்வர் யோகி வழிபாடு!

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

SCROLL FOR NEXT