விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சம்தவிழ்த்தான் பகுதி விளைநிலங்களில் மக்காச்சோளம், சூரியகாந்தி, நெல் மற்றும் பருத்தி போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.

இந்நிலையில், தொடா் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம், நெல் மற்றும் சூரியகாந்தி போன்ற பயிா்கள் அழுகல் நோய் தாக்கி சேதமடைந்தன. இதனைத் தொடா்ந்து தங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அச்சம்தவிழ்த்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அழுகிய மக்காச்சோள பயிா்களைக் கொண்டு வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் வட்டாட்சியா் சரவணனிடம் அவா்கள் மனு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT