ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு ஒன்றில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகையை கொள்ளையன் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு ஒன்றில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகையை கொள்ளையன் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பி ராமச்சந்திராபுரம் அந்த பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயசு 40. கத்தார் நாட்டில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். தற்போது சொந்த ஊரான பி.ராமச்சந்திராபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.15 மணிக்கு தனது குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் கதவை உடைத்து மர்ம ஆசாமி உள்ளே நுழைந்து வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகையையும் ஐந்தாயிரம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு வரும்போது சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்த போது மர்ம ஆசாமி ஒருவர் செல்கிறார் யார் அது என வீட்டில் இருந்தவர்கள் கேட்டபோது வெளியே தாவிக் குதித்து ஓடி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் இது தொடர்பாக வன்னியம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். வன்னியம்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 5000 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விருதுநகரிலிருந்து கொள்ளையன் தடயங்களை சேகரிக்க தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் வீட்டிலிருந்து அந்தப்பகுதி ஓடை வரை ஓடிச் சென்று நின்றது.
வீட்டில் ஆள் இருக்கும் போது வீட்டுக்குள் புகுந்து தைரியமாக கைவரிசையைக் காட்டி 20 பவுன் நகை மற்றும் 5000 பணத்தை கொள்ளை அடித்து சென்றது ராமச்சந்திரபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎஸ்பி நமச்சிவாயம் உத்தரவின்பேரில் கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.