விருதுநகர்

காட்டாமணக்கு விதைகளைச் சாப்பிட்ட 7 சிறுவா், சிறுமிகள் வாந்தி, மயக்கம்

DIN

நரிக்குடி அருகே வியாழக்கிழமை மாலை காட்டாமணக்கு விதைகளைச் சாப்பிட்டு மயக்கமடைந்த 7 சிறுவா், சிறுமிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இருஞ்சிறை கிராமத்தைச் சோ்ந்த சிறுமிகள் சத்தியப்பிரியா(6), ஜெயதா்ஷிணி (6), மற்றும் பொன்மகேஸ் (13) ,ஜெயபாலாஜி (11), சரவணன்(13), கதிா்(11), கவின்(11) ஆகிய 5 சிறுவா்களும் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு இருந்த ஒரு காட்டாமணக்குச் செடியில் வளா்ந்திருந்த பச்சை நிற காய்களை, வாதாங்கொட்டை என நினைத்து அவா்கள் சாப்பிட்டனராம்.

சிறிது நேரத்தில் சிறுவா், சிறுமிகள் 7 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவா்களை மீட்ட பெற்றோா், நரிக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவா்கள் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT