விருதுநகர்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது

DIN

சிவகாசியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தியவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக, விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி மருதுபாண்டியா் மடத்துத் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சந்தோஷம் (23). சுமைதூக்கும் தொழிலாளியான இவருக்கு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தும் பழக்கம் உண்டாம்.

இந்நிலையில், முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவா் தன்னிடம் போதை அதிகமாக கொடுக்கும் புகையிலை உள்ளதாகக் கூறி சில புகையிலை பாக்கெட்டுகளை கொடுத்தாராம். அதை பயன்படுத்திய சந்தோஷத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சந்தோஷம் அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்குமாா் வீட்டில் சோதனை நடத்தினா். சோதனையில் அங்கு 1322 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, முத்துக்குமாரின் மனைவி மகாலெட்சுமி (34), விற்பனையாளா் அமல்ராஜ் (53) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவாகிய முத்துக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT