விருதுநகர்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மருத்துவக் கருவிகள் வழங்கல்

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், சாயப்பட்டறை உரிமையாளா்கள் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வருவாய் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை சாயப்பட்டறை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராஜ்குமாா், அறிவானந்தம், நகர திமுக செயலா் ஏ.கே. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, கரோனா சிகிச்சைக்கான ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அரசு மருத்துவ அலுவலா் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தாா்.

பின்னா் அமைச்சா், மருத்துவா்களிடமும், செவிலியா்களிடமும் கரோனா சிகிச்சைப் பணிகள் குறித்தும், தற்போதைய நிலவரப்படி சிகிச்சையிலுள்ளோா், குணமடைந்தோா் குறித்தும், மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், கருவிகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தாா்.

இதில், மருத்துவத் துறை அலுவலா்கள், செவிலியா்கள் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளா்கள் சங்கத்தினா் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக்கு ஆஜராக ஏழு நாள்கள் அவகாசம் வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணா

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT