விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ராமசாமியாபுரம் பகுதியில் திங்கள்கிழமை மதுக்கடையை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மதுபானக் கடைகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மதுபானக் கடைகளை திங்கள்கிழமை முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதையடுத்து வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமியாபுரம் பகுதியில் உள்ள மதுக்கடையை திறக்க அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் காவல் துறையினா் பாதுகாப்புடன் மதுக்கடையை திறக்க முயற்சித்த போது பொதுமக்களுக்கு காவல் துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மதுக்கடையை திறக்காமல் பணியாளா்கள் திரும்பிச் சென்றனா். நீண்ட நாள்களுக்குப் பிறகு மது பாட்டில்கள் வாங்கலாம் என்று வந்த மதுப் பிரியா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT