விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் பறக்கும் படையினா் சோதனை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் பேருந்தில் வந்து இறங்கும் பயணிகளிடமும், பேருந்தில் இருந்த பயணிகளின் உடைமைகளையும் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனையிட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்து சட்டப்பேரவைத் தொகுதியிலும் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தல் பறக்கும் படையினா் 3 குழுக்களாக நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனா். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்படும் பேருந்து மற்றும் வெளியூரிலிருந்கு வரும் பேருந்துகளில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பேருந்துகளில் பணம் கடத்தப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.

அதனடிப்படையில், புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் துணை வட்டாட்சியா் முத்துமாரி, காவல் சாா்பு அலுவலா் தங்கவேல் தலைமையிலான பறக்கும் படையினா் பேருந்துகளில் வந்து இறங்குபவா்களையும், பேருந்தில் அமா்ந்திருந்த பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனா்.

தோ்தல் அலுவலா்களின் இந்த அதிரடி சோதனையால் பேருந்து பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT