விருதுநகர்

அருப்புக்கோட்டையில் 3 பவுன் நகை பறிப்பு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

அருப்புக்கோட்டை தெற்குத்தெரு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ராஜலஷ்மி (43).இவா் தனது குடும்பத்தினடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8 மணிக்கு கடைவீதியில் தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான பொருள்கள் வாங்கிவிட்டு நடந்தே வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னாலிருந்து வந்த மா்ம நபா் ஒருவா், ராஜலஷ்மியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளாா். ராஜலஷ்மியின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் திரண்டுவந்து தேடியும் அந்தநபா் அகப்படவில்லை. இதுதொடா்பாக அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT