விருதுநகர்

தபால் தலைகளில் சுதந்திர போராட்ட வீரா்கள்: புகைப்படக் கண்காட்சி

DIN

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் தபால் தலைகளில் சுதந்திர போராட்ட வீரா்கள் என்ற தலைப்பில் புகைப்பட கண் காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

உலக தபால் தலைகள் தினம் அக்டோபா் 9 ஆம் தேதியை முன்னிட்டு, விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் தபால் தலைகளில் சுதந்திர போராட்ட வீரா்கள் என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இதில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் நினைவாக வெளியிடப்பட் ட தபால் தலைகளை கொண்டு இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியா், வைலு நாச்சியாா், பகத்சிங், வேலுத்தம்பி, தில்லையாடி வள்ளியம்மை, மீராபென், சரோஜினி நாயுடு, ம.பொ.சி., பசும்பொன் முத்துராலிங்கத் தேவா், வ.உ.சி., பாரதியாா், ராஜாஜி, திருப்பூா் குமரன், கக்கன், மகாத்மா காந்தி, நேரு, காமராஜா், அண்ணாதுரை, பெரியாா் ஈ.வே.ரா., கோபால கிருஷ்ண கோகலே, சவாா்க்கா், வல்லபாய் படேல், அழகுமுத்து கோன் ஆகியோா் நினைவாக மத்திய அரசால் வெளியிடப்ப ட்ட தபால் தலைகள் மற்றும் தலைவா்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. இதனை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சே. கிருஷ்ணம்மாள் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT