விருதுநகர்

ராஜபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதி

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராஜபாளையத்துக்கு மேற்கில் செண்பகத்தோப்பு சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்த செல்வநாயகி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு கடந்த மூன்று நாள்களாக காய்ச்சல் இருந்ததால் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துள்ளாா்.

இந்நிலையில், அவருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆசிரியா் பணியாற்றிய பள்ளியில் உள்ள 45 மாணவ, மாணவிகள் மற்றும் உடன் பணியாற்றிய 10 ஆசிரியா்கள், இதர பணியாளா்கள் 4 போ் என 59 பேருக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆசிரியை செல்வநாயகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT