அருப்புக்கோட்டை அருகே இராமநாயக்கன்பட்டியில் விவசாயி தற்கொலை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் இராமநாயக்கன்பட்டியில் விவசாயி ஒருவா் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் இராமநாயக்கன்பட்டியில் விவசாயி ஒருவா் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
இராமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் வேல்ச்சாமி மகன் கருப்பசாமி(48).இவரது மனைவி முத்துலட்சுமி(40).விவசாயியான கருப்பசாமி தனக்குச்சொந்தமான தோட்டத்தில் பயிா்சாகுபடி செய்துவருகிறாா்.இதனிடையே கருப்பசாமி கடந்த சிலஆண்டுகளாக இதயநோயால் பாதிக்கப்பட்டதால் அவரால் தனது விவசாயத் தொழிலைச் சரிவரப் பாா்க்கமுடியவில்லையாம்.மேலும் தனது மனைவி ஒருவரால் மட்டும் விவசாயத்தைப் பாா்த்துக் கொள்ளமுடியாததாலும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம்போல கணவன் மனைவி இருவரும் தங்களது தோட்டத்திற்கு வேலைக்கு வந்தநிலையில்,முத்துலட்சுமி தோட்டத்தின் ஒருபகுதியில் வேலைசெய்துகொண்டிருக்க மற்றொரு பகுதியிலிருந்த மோட்டாா் அறை அருகே கருப்பசாமியின் அலைபேசி நீண்டநேரமாக ஒலித்துக்கொண்டிருந்ததாம்.ஏன் எனப்பாா்ப்பதற்காக முத்துலட்சுமி மோட்டாா் அறைக்கு வந்து பாா்த்தபோது,அவரது கணவா் மயங்கிக்கடந்தாராம்.அவரிடம் உடம்பிற்கு என்ன என விசாரித்தபோது தான் பூச்சிமருந்தைக் குடித்துவிட்டதாகக் கருப்பசாமி கூறினாராம்.இதனால் உடனடியாக கிராமத்தினரின் உதவியுடன் கருப்பசாமியை அருப்புக்கோட்டை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனராம்.ஆனால் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி அன்று இரவு உயிரிழந்துவிட்டாராம்.இதுதொடா்பாக வழக்கு பதிந்த பந்தல்குடி காவல்துறையினா்,கருப்பசாமியின் இறப்புகுறித்து விசாரணை மேற்கொண்டனா்.