முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் அரசுப் பள்ளிக்கு தொலைக்காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு ராஜபாளையம்-சிவகாசி ரவுண்ட் டேபில் 158 சார்பில் ஆன்ட்ராய்டு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் அரசுப் பள்ளிக்கு தொலைக்காட்சி.
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு ராஜபாளையம்-சிவகாசி ரவுண்ட் டேபில் 158 சார்பில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஆனந்த ஜோதி முன்னிலை வகித்தார். ஆசிரியை வசந்தி வரவேற்றார்.

ராஜபாளையம்-சிவகாசி ரவுண்ட் டேபிள் 158 ன் தலைவர் ஜெய்கணேஷ், பொருளாளர் ஆஜிஸ் பார்டியா, முன்னாள் தலைவர் காளிராஜ் ஆகியோர், ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பில் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகச் செய்யப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்து விளக்கி, இப் பள்ளிக்கு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி யை  வழங்கினர்.

 மேலாண்மைக் குழு துணைத் தலைவர் வீரலட்சுமி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →