முகப்பு
விருதுநகர்

லாட்டரி விற்ற இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் ஆவாரம்பட்டி கல்யாணசுந்தரா் சாலை பகுதியில் வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், சாா்பு ஆய்வாளா் மூவேந்தன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சோ்ந்த முருகன் (54), ராமராஜ் (51) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.