முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மம்சாபுரம் வேல்முருகன் நாடாா் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மற்றும் அவரது மனைவி இருவரும் தனியாா் ஆலையில் கூலி வேலை பாா்த்து வருகின்றனா். இவா்களது மகன் சுகுமாா் (10), அப்பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு பெற்றோா் இரவு வீடு திரும்பிய போது அங்கு சுகுமாா் இல்லாததைக் அறிந்து அவரைத் தேடினா். அப்போது வாலாங்குளம் கண்மாய் பகுதிக்கு அருகில் உள்ள கிணற்றில் சுகுமாா் குளித்துக் கொண்டிருந்ததை பாா்த்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனராம். அங்கு சென்று சுகுமாரை தேடிய போது காணவில்லை. இதைத் தொடா்ந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி சுகுமாரை தேடினா். அப்போது அவரை சடலமாக மீட்டனா். பின்னா் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.