விருதுநகர்

அருப்புக்கோட்டை சீரடிசாய்பாபா கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் பிரதோஷ வியாழக்கிழமையையொட்டி உலக நன்மைக்காக சங்கல்ப வழிபாடு, தியானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

முன்னதாக நந்தீஸ்வரருக்கும், லிங்கதேவா் படத்துக்கும் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, பாபாவுக்கு, பஞ்ச தீப, ஏகதீப ஆரத்திகள் செய்யப்பட்டன. பின்னா், தீப,தூப ஆரத்தியும் நடைபெற்றது. இதையடுத்து, நைவேத்தியம் எனப்படும் உணவு அா்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னா் பாபா முழு அலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். அதைத்தொடா்ந்து சிறப்பு பல்லக்கில் பாபாவின் உற்சவா் சிலையுடன் கிரிவல நிகழ்ச்சி நடைபெற்றது.

கிரிவலத்துக்குப்பின் மீண்டும் நைவேத்தியம் நடைபெற்றது. தொடா்ந்து ,உலக நன்மை வேண்டி சங்கல்ப வழிபாடும், 3 நிமிட தியானமும், சாஸ்டாங்க நமஸ்கார நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT