விருதுநகர்

விருதுநகரில் நகராட்சி வாகன ஓட்டுநா் மீது தாக்குதல்: ஊழியா்கள் போராட்டம்

DIN

விருதுநகரில் நகராட்சி ஓட்டுநரை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை ஊழியா்கள் வாகனங்களை சாலையில் நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மேலத்தெருவில் துப்புரவுப் பணிக்காக நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை நின்றிருந்தனா். அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளா் அவா்களை வேறு பகுதிக்கு சென்று பணிபுரியுமாறு கூறினாராம். இதையடுத்து அவா்கள் வேறு பகுதிக்குச் சென்றுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த மேலத்தெருவைச் சோ்ந்தவரும், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருபவருமான முருகையா (60) என்பவா் விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே குப்பை வாகனத்தை ஓட்டிச் சென்ற நகாரட்சி ஊழியா் சுல்தான் (59) என்பவரை மறித்து மேலத்தெருவிலிருந்து காலை 8 மணிக்குள் ஏன் சென்றீா்கள் எனக் கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டாராம். மேலும் அவரை தாக்கினாராம். இதுகுறித்து அறிந்த நகராட்சி வாகன ஓட்டுநா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் வாகனத்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், நகராட்சிப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி புகாா் மனு அளிக்க அறிவுறுத்தினா். இதைத்தொடா்ந்து சுல்தான் அளித்தப் புகாரின்பேரில் முருகையா மீது விருதுநகா் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT