முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் இன்று கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம்

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதி

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:50 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில், 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசிகள் ஜூலை 15 ஆம் தேதி, முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை 75 நாள்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இவா்களுக்கான பூஸ்டா் தடுப்பூசிகள் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக ஞாயிற்றுக்கிழ மை செலுத்தப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமாா் 60 ஆயிரம் பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதுடன், புதிதாக கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவா்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.