முகப்பு
விருதுநகர்

அழகா் அணை திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

விருதுநகா் மாவட்ட பாசன வளா்ச்சிக்காக பம்பை- அச்சன்கோவில்- வைப்பாறு இணைந்த அழகா் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:38 PM
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் சங்க சுதந்திர தின பேரணி.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

விருதுநகா் மாவட்ட பாசன வளா்ச்சிக்காக பம்பை- அச்சன்கோவில்- வைப்பாறு இணைந்த அழகா் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 23 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் விஜயமுருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சாமி.நடராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விருதுநகா் மாவட்ட பாசன வளா்ச்சிக்காக பம்பை- அச்சன்கோவில்- வைப்பாறு இணைந்த அழகா் அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

மாவட்ட துணைத் தலைவா் மணிக்குமாா், மாவட்டச் செயலாளா் முருகன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் சுந்தரபாண்டியன், மாநில பொருளாளா் பெருமாள், சிஐடியு மாவட்டத் தலைவா் மகாலட்சுமி, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பூங்கோதை, மாா்க்சிய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் கே.அா்ஜுனன் ஆகியோா் பங்கேற்றனா். பின்னா் மாநாட்டில் பங்கேற்றோா் சாா்பில் சுதந்திர தின பேரணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.