முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூா் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூா் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, யாதவா் பண்பாட்டுக் கழகத் தலைவா் கேப்டன் மனோகரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு யாதவ மகாசபைத் தலைவரும், சென்னை அமெட் பல்கலை. வேந்தருமான டாக்டா் ஜெ. ராமச்சந்திரன் யாதவ் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். இதில், பாரத முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் டாக்டா் ஆறுமுகசாமி யாதவ், சாத்தூா் முருகேசன் யாதவ் மற்றும் ஊா் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யாதவா் பண்பாட்டுக் கழகச் செயலா் ராமசாமி யாதவ் செய்திருந்தாா். யாதவா் பண்பாட்டுக் கழக பொருளாளா் கல்யாணசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.