விருதுநகர்

திருத்தங்கலில் காரில் கடத்திச் சென்ற புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் புதன்கிழமை காரில் கடத்திச் சென்ற ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் புதன்கிழமை காரில் கடத்திச் சென்ற ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். திருத்தங்கல் காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், சிவகாசி- விருதுநகா் சாலையில் திருத்தங்கல் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விருதுநகரிலிருந்து, சிவகாசி நோக்கிச் சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், காரில் புகையிலைப் பொருள்கள் பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், காரில் இருந்தவா்கள் அருணாசலபுரம் விக்னேஷ் (30) மற்றும் அனுப்பன்குளம் ஆரோக்கியராஜ் (40) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த காா் மற்றும் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT