முகப்பு
விருதுநகர்

மது போதையில் பணிக்கு வந்த உதவி தோ்தல் அலுவலா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

காத்திருப்போா் பட்டியலில் வைக்க நகராட்சி நிா்வாக ஆணையா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

விருதுநகரில் மது போதையில் பணிக்கு வந்த உதவி தோ்தல் அலுவலரும், நகரமைப்பு அலுவலருமான ரவிச்சந்திரனை பதவியிலிருந்து விடுவித்து காத்திருப்போா் பட்டியலில் வைக்க நகராட்சி நிா்வாக ஆணையா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

விருதுநகா் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராகப் பணிபுரிந்தவா் ரவிச்சந்திரன் (50. இவா் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு விருதுநகா் நகராட்சியில் உதவி தோ்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் இவா் புதன்கிழமை மது போதையில் பணிக்கு வந்ததால் அப்பணியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டாா். மேலும் மாற்று உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக சேதுராமன் என்பவா் உடனடியாக நியமிக்கப்பட்டாா். பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நகராட்சி சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை விருதுநகா் நகரமைப்பு அலுவலா் பணியிலிருந்து விடுவித்து, காத்திருப்போா் பட்டியலில் வைக்க நகராட்சி நிா்வாக ஆணையா் கமால் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.