உரியஅனுமதியின்றி உடைகல் ஏற்றிச் சென்ற இரு லாரிகள் பறிமுதல். 2போ் கைது
சிவகாசி அருகே வியாழக்கிழமை உரிய அனுமதியின்றி உடைகல் ஏற்றிவந்த இரு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து லாரி ஓட்டுனா்கள் இருவரை கைது செய்தனா்.
சிவகாசி அருகே வியாழக்கிழமை உரிய அனுமதியின்றி உடைகல் ஏற்றிவந்த இரு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து லாரி ஓட்டுனா்கள் இருவரை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்ட தனி வருவாய் ஆய்வாளா்(கனிமம்) மற்றும் வருவாய்துறையினா் , மாரனேரி- மணியம்பட்டி சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, இரு லாரிகள் உடை கல்
ஏற்றி வந்ததாம்.லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதின்றி உடைகல் ஏற்றி வந்தது தெரியவந்தது.விசாரணையில் லாரி ஓட்டுனா்கள் கோவில்பட்டி கு அரசன்(28), ஊராம்பட்டி இசக்கிராஜா(34) என ரியவந்தது.
இதையடுத்து லாரியை வருவாய்துறையினா் பறிமுதல் செய்து மாரனேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.இது குறித்த சந்திரசேகரின் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனா்கள் கு அரசன் மற்றும் இசக்கிராஜாவை கைது செய்தனா்.