ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தோ்தல் பறக்கும் படை தனி வட்டாட்சியா் ரங்கசாமி மற்றும் சாா்பு- ஆய்வாளா் அமுதா ஆகியோா் மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை தனியாா் பள்ளி அருகே வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளரான காளிமுத்து என்பவா் கடையின் விற்பனைப் பணம் ரூ. 3 லட்சத்து 2140-யை வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலரும் தோ்தல் நடத்தும் அலுவலருமான உஷாகிரேஸிடம் ஒப்படைத்தனா்.